கோவை: கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மீது ஓட்டுநர் ஒருவர் சிறுநீர் கழித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை கோவையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் செல்லும் பேருந்து ஒன்று நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு தயாராக வழி தடத்தில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்து கீழே இறங்கிய பேருந்து ஓட்டுநர் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென பேருந்தில் சிறுநீர் கழிக்க துவங்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேருந்து பயணி ஒருவர் அதை செல்போனில் விடியோவாக பதிவு செய்தார்.
மேலும் அரசு பேருந்து ஓட்டுநர் தானே நீங்கள் நிலையத்தில் கழிவறைகள் இருக்கும் போது பேருந்தில் இப்படி சிறுநீர் கழிக்கலாமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதை கண்டுகொள்ளாத பேருந்து ஓட்டுநர் கோலமிடுவது போல் அரசு பேருந்திற்கு சிறுநீரால் அபிஷேகம் செய்து கடமையாற்றி உள்ளார். அந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரை முகம்சுளிக்க வைக்கிறது. செய்யும் தொழில் தெய்வம் இல்லையா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டுக் கட்டாக ரூ.29 கோடி பணம், 15 கிலோ தங்கம் பறிமுதல்! அதுவும் முன்னாள் பேருந்து ஓட்டுநர் வீட்டில்!

ஆடையில் சிறுநீர் கழித்த குழந்தைக்குக் கொடூர தண்டனை அளித்த ஆசிரியை!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் குளிர்ச்சியடைய...

வெளியானது பூம் பா டிக டிகா விடியோ பாடல்!
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



