புதுதில்லி: பாஜக மூத்த தலைவரும் முன்னாள் இந்தியத் துணைப்பிரதமருமான லால் கிருஷ்ணா அத்வானி தில்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
96 வயதான அத்வானி இரண்டு நாளுக்கு முன்னர் திடீர் உடல்நிலை குறைவுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் மருத்துவமனைத் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில், ஏற்கனவே இந்த ஆண்டின் துவக்கத்தில் அவர் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.