அம்பேத்கரை அவமதித்ததாகக் தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் கண்டித்து திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் முன்னதாக அறிவித்தது.
இந்த நிலையில், அமித் ஷா உடனடியாக மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முழக்கமிட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அம்பேத்கர் குறித்து அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு எதிர்த்து சென்னை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: தங்கம் பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?
மத்திய அமைச்சர் அமித் ஷா சர்ச்சை
மாநிலங்களவையில் அமித் ஷா செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோது, காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் அம்பேத்கா் பெயரையும், அரசியல் சாசனம் குறித்தும் தொடா்ச்சியாகப் பேசி வருவதை விமா்சித்தாா்.
‘அம்பேத்கா் பெயரை தொடா்ந்து பல முறை முழக்கமிடுவது வாடிக்கையாகிவிட்டது. அதற்குப் பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்தால், சொா்க்கத்தில் அவா்களுக்கு இடம் கிடைத்திருக்கும்’ என்று குறிப்பிட்டாா்.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. மக்களவை புதன்கிழமை காலை 11 மணிக்கு கூடியபோது, அம்பேத்கா் புகைப்படத்துடன் அவைக்கு வந்த எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதியில் ஒன்றுகூடி முழக்கங்களை எழுப்பியபடி அமளியில் ஈடுபட்டனா்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களித்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

தமிழகம் முழுவதும் ஸ்டாலின் அலை: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

பயங்கரவாதம் மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரி: அமித் ஷா

தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அலை: பிரேமலதா விஜயகாந்த்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


