
புஷ்பா - 2 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா - 2 . இப்படம் டிச. 5-ல் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
ஆனால், ரூ. 1400 கோடி வரை வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் ஃபாசிலுக்கு இடையேயான வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வைராகியுள்ளன.
இதையும் படிக்க: நிறங்கள் மூன்று ஓடிடி வெளியீட்டுத் தேதி!
புஷ்பா - 2 படம் மிக குறைவான நாள்களில் இந்த சாதனையைப் அடைந்ததுடன், சில பிரம்மாண்ட படங்களின் வசூலையும் முறியடித்துள்ளது.
இந்த நிலையில், புஷ்பா -2 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் வரும் ஜன. 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.