கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சக மாணவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்!

ஒடிசாவில் 14 வயது சிறுவன் ஒருவன் சக மாணவனை கத்தியால் குத்தியதைப் பற்றி..

கோப்புப்படம்

Published On :

ஒடிசா: கேந்திராப்பரா மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியில் சக மாணவனை 14 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தியுள்ளான்.

பட்டாமுண்டை கிராம காவல் நிலையம் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் இயங்கிவரும் தெலுங்காபசன்ட் நோடல் அரசுப் பள்ளியின் வகுப்பறையில் 14 வயதுடைய எட்டாம் வகுப்பு சிறுவன் ஒருவன் தன்னுடன் பயிலும் சக மாணவனை கத்தியால் குத்தியுள்ளான்.

அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் கத்தியால் குத்திய சிறுவனை ஒடிசா காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்திய ரத்தம் படிந்த கத்தியும் அவனிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில். அவரது உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சக மாணவனைத் தாக்கியதற்கு பின்னால் உள்ள காரணம் குறித்து எந்தவொரு தகவலும் வெளிவராத நிலையில். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.