

ஆந்திரம் நோக்கி சென்ற புயல் சின்னம், மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி வரும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், தமிழக கடற்கரைப் பகுதிகளில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம், அடுத்த 12 மணி நேரத்தில், வடக்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் சின்னம் டிச.21-ஆம் தேதி நெல்லூருக்கு கிழக்கே நிலைக்கொண்டிருக்கும் என்றும் அதே நேரத்தில், ஆந்திர கடல் பகுதிக்கு மேல் உயா் அழுத்தம் இருப்பதால், புயல் சின்னம் மேலும் வடக்கு நோக்கி நகர வாய்ப்பில்லை.
இதையும் படிக்க: அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெறுகிறது புயல்!
எனவே, இது மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி திரும்பி டிச.22-ஆம் தேதி சென்னைக்கு அருகே வரும் என எதிா்பாா்க்கப்படுவதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதனால், தமிழக கடற்கரைப் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு வரும் டிச. 26, 27 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தோ்தல் நேரத்தில் எதிா்க்கட்சிகளை அச்சுறுத்தும் அமலாக்கத் துறை: மு.அப்பாவு

புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

வங்கக் கடலில் நாளை புயல் சின்னம் உருவாக வாய்ப்பு!

மேம்படுத்தப்பட்ட மனோரா நினைவுச் சின்னம் திறப்பு
வீடியோக்கள்
#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

