சென்னை புத்தகக் காட்சி: துணை முதல்வர் உதயநிதி தொடக்கிவைத்தார்!

சென்னை புத்தகக் காட்சி தொடக்கம் தொடர்பாக...
சென்னை புத்தகக் காட்சி: துணை முதல்வர் உதயநிதி தொடக்கிவைத்தார்!
Published on
Updated on
1 min read

48-வது சென்னை புத்தகக் காட்சியை துணை முதல்வர் உதயநிதி தொடக்கிவைத்தார்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்தனர்.

ஜனவரி 12-ஆம் தேதி வரை மொத்தம் 17 நாள்களுக்கு புத்தகக் காட்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

48-ஆவது புத்தகக் காட்சியில் மொத்தம் 900 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. வேலைநாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் புத்தகக் காட்சி நடைபெறும்.

அனைத்து நூல்களும் 10 சதவீத தள்ளுபடியுடன் வாசகா்களுக்கு வழங்கப்படும். பபாசியில் உறுப்பினா் அல்லாத பலரது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவா்களுக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென நிகழாண்டில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெற உள்ளன. நாள்தோறும் மாலையில் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலைசிறந்த அறிஞா்கள், எழுத்தாளா்களின் உரைவீச்சுகள் நடைபெற உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com