சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட புதுத்தெருவில் ரூ.18.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதல்வர் திருமண மாளிகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்ட சென்னை, ஆலந்தூர் முதல்வர் திருமண மாளிகையானது 21,245 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
தரைதளத்தில் வாகனங்கள் நிறுத்தும் வசதிகள், முதல் தளத்தில் உணவுக்கூடம், இரண்டாம் தளத்தில் குளிரூட்டப்பட்ட திருமணக் கூடம் மற்றும் விருத்தினர் தங்கும் அறை, மூன்றாம் தளத்தில் விருந்தினர் தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 எண்ணிக்கையிலான மின்தூக்கி வசதிகள், 620 இருக்கை வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம், ஒரே சமயத்தில் 240 நபர்கள் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் உணவுக்கூடம், 40 எண்ணிக்கையிலான 4 சக்கர வாகனம் நிறுத்தும் வசதிகள், 80 எண்ணிக்கையிலான 2 சக்கர வாகனம் நிறுத்தும் வசதிகள், சமையலறை கூடம், ஆண்,பெண் இருபாலருக்கும் நவீன கழிப்பறை வசதிகள் மற்றும் மணமகன், மணமகள் இருபாலருக்கும் ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திருமண மண்டபத்தில் 2 எண்ணிக்கையிலான 45,000 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் சேமிப்பிற்கான குடிநீர் தொட்டிகள், 37,000 லிட்டர் கொள்ளவு கொண்ட தீயணைப்பிற்காக மேல்நிலை தீயணைப்பு நீர்த் தொட்டிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேமிப்பு தொட்டிகள் மற்றும் பொது உபயோகத்திற்கான தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃப்தாப் ரசூல், ஆலந்தூர் மண்டலக் குழுத்தலைவர் என்.சந்திரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Summary
Dy CM Inaugurate Aalathur Muthalvar Thirumana Maligai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவிலேயே சிறந்த தொகுதி கொளத்தூர் : உதயநிதி பிரசாரம்
ஆளுநர் மூலமாக புதுவையை ஆளும் பாஜக! மாநில அந்தஸ்து வழங்க மறுப்பு! உதயநிதி பேச்சு
இன்னும் 16 நாள்களே உள்ளன! - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
மக்களிடம் மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்பேன்; திமுக தொடர்ந்து 2-ம் முறை ஆட்சியமைக்கும்: உதயநிதி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


