திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

இந்தியாவிலேயே சிறந்த தொகுதி கொளத்தூர் : உதயநிதி பிரசாரம்

இந்தியாவிலேயே சிறந்த தொகுதி கொளத்தூர் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து...

Udhayanidhi Stalin campaign

உதயநிதி ஸ்டாலின் - யூடியூப் / Udhayanidhi Stalin

Published On :

இந்தியாவிலேயே சிறந்த தொகுதி கொளத்தூர் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப். 8) தெரிவித்தார்.

முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக கொளத்தூர் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப். 8) வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசாரத்தின்போது உதயநிதி பேசியதாவது:

''அப்பாவுக்கு வாக்கு கேட்டு தொண்டனாக வந்துள்ளேன். தமிழகத்துக்கு முன்னுதாரணமாக உள்ள தொகுதி. தேர்தலில் எதிரணியினரை ஓட ஓட விரட்ட வேண்டும். கொளத்தூர் தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்களை முதல்வர் நிறைவேற்றியுள்ளார்

முதல்வராக பொறுப்பேற்றதும் மு.க. ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பயணத் திட்டத்துக்குத்தான். அன்று முதல் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

இம்முறை ஆட்சி அமைந்தால், மகளிர் தங்கள் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளும் வகையில் ரூ. 8 ஆயிரம் கூப்பன் வழங்கும் இல்லத்தரசி திட்டம் கொண்டுவரப்படும்.

இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. மத்திய பாஜக அரசு இதற்கு துணை நிற்கவில்லை.

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் இல்லை. பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. தமிழ்நாட்டை புறக்கணிக்கும் பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

தேர்தலுக்கு இன்னும் 15 நாள்கள் உள்ளன. பிரசாரத்துக்காக கூடி கலைந்த கூட்டமாக இது இருக்கக் கூடாது. களத்தில் மக்கள் இறங்க வேண்டும். பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தில் மக்கள் ஈடுபட வேண்டும்.

தமிழ்நாட்டின் முதல்வரை தேர்வு செய்யப்போகும் தொகுதி கொளத்தூர். உதய சூரியன் சின்னத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மு.க. ஸ்டாலினை வெற்றி பெறச் செய்ய வேண்டும்'' என உதயநிதி பேசினார்.

Summary

Udhayanidhi Stalin campaign for mk stalin in kolathur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.