murder
கோப்புப் படம்

கார் தாக்குதலில் 35 பேரை கொன்ற குற்றவாளிக்கு மரண தண்டனை !

சீனாவில் கார் தாக்குதலில் 35 பேரைக் கொன்ற குற்றவாளிக்கு மரண தண்டனை
Published on

சீனாவில் கார் தாக்குதல் நடத்தி 35 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ஃபான் வெய்குய் (வயது-62) என்ற நபர் தனது மனைவியுடன் விவாகரத்து ஆனதினால் ஏற்பட்ட விரக்தியில் அங்குள்ள விளையாட்டு மையத்தில் பயிற்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தவர்களின் மீது தனது காரைச் செலுத்தி தாக்குதல் நடத்தினார், இந்த தாக்குதலில் 35 பேர் பலியானார்கள்.

இந்த தாக்குதலை நடத்திய ஃபான் வெய்குய்க்கு இன்று (டிச.27) சீனாவின் சூஹாய் நகர நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இந்த தீர்புக் குறித்து அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது, ஃபான் செய்த குற்றம் மிகவும் மோசமானது எனவும் அது இந்த சமூதாயத்தின் மீது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதனால் அவர் செய்த செயலுக்கான விளைவும் பயங்கரமானதாக இருக்கும், எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சீனாவில் பொதுமக்கள் மீதான கார் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

இதேப்போல், கடந்த நவம்பர் 19 அன்று ஹுனான் மாகாணத்தில் பள்ளிக்கூடத்தின் வாசலில் நின்றுக்கொண்டிருந்தவர்களின் மீது கார் தாக்குதல் நடத்தி 30 பேர் படுகாயமடைந்த வழக்கில் குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com