ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!ஆண்டுதோறும் சினிமா, சின்ன திரை விருதுகள்: ராஜ்மோகன் உறுதி கத்திக்குத்துக்குப் பிறகும் மக்கள் உயிரைக் காத்த இந்திய விமானி! மோடி புகழாரம்ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

மொராக்கோ கடலில் அகதிகள் படகு மூழ்கியது! 69 பேர் பலி!

மொராக்கோ கடல் பகுதியில் அகதிகள் படகு மூழ்கியதில் 69 பேர் பலியானதைப் பற்றி..

கோப்புப் படம்

Published On :

மொராக்கோ கடல்பகுதியில் நாட்டுப் படகு மூழ்கியதில் 69 அகதிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிச.19 அன்று ஐரோப்பாவிலுள்ள ஸ்பெயின் நாட்டைச் சென்றடையும் நோக்கில் நாட்டுப் படகொன்றில் 80 பேர் சென்றனர். இந்தப் படகு, வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் கடல்பகுதியில் நீருக்குள் மூழ்கியது.

இந்த விபத்தில் 69 பேர் பலியானதாகத் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 25 பேர் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியைச் சேர்ந்தவர்கள் என அந்த நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், கடலில் தத்தளித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் மாலி நாட்டினர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஜிகாத் படைகளாலும், பிரிவினைவாத படைகளினாலும் தொடர் வன்முறைகள் நிகழ்ந்து வருவதினால் ஆயிரக்கணக்கான மக்கள், வாழ்க்கையைத் தேடி அந்நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இதில், மொராக்கோ நாட்டு கடற்பகுதியிலிருந்து ஸ்பெயின் நாடு வெறும் 14 கி.மீ என்பதினால் அதன் வழியாக ஏராளமான அகதிகள் தற்காலிக படகுகளை உருவாக்கி பயணித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தனியார் அமைப்பான கேமினாண்டோ ஃப்ரோடெராஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தாண்டில் (2024) மட்டும் சட்டவிரோதமாக ஸ்பெயின் நாட்டிற்கு பயணித்த 10,400 பேர் பலியாகியுள்ளார்கள் எனும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால் நாளொன்றுக்கு சுமார் 30 பேர் ஸ்பெயின் நாட்டிற்கு செல்லும் முயற்சியில் பலியாவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.