எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தென்கொரியா விமான விபத்து: பலி 62-ஆக உயர்வு!

தென்கொரியா விமான விபத்து பலி எண்ணிக்கை உயர்வு.

News image
Updated On :29 டிசம்பர் 2024, 4:17 am

DIN

தென்கொரியாவில் நடந்த விமான விபத்தின் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டின் தேசிய தீயணைப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து ஜெரு ஏர் பிளைட் 2216 என்ற விமானம், 175 பயனிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் தென் கொரியாவுக்கு சென்ற நிலையில், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விமானம் விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் விமானத்தின் பின்பகுதி தீப்பற்றி எரிந்து பயங்கர புகை கிளம்பியது.

"இதுவரை இருவர் மீட்கப்பட்டுள்ளனர், 62 பேர் பலியாகியுள்ளனர், பலியானவர்களில் 25 பேர் ஆண்கள், 37 பேர் பெண்கள்." என்று தென்கொரியாவின் தேசிய தீயணைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பலர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிகை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முற்பட்டபோது, ​​”விமானம், பறவைகள் மீது மோதியதின் விளையாக, தரையிறங்கும் கருவியில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டு இருக்கலாம்” என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.