கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சிவகார்த்திகேயனுடன் இணைந்த கன்னட நடிகை: பூஜை புகைப்படங்கள்!

முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படத்தில் பிரபல கன்னட நடிகை இணைந்துள்ளார்.

Published On :

முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படத்தில் பிரபல கன்னட நடிகை இணைந்துள்ளார்.

நடிகர் விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்கார் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அவர் அடுத்து விஜய்யுடன் படம் இயக்குவதாக இருந்தது.

பின்னர் அந்த பேச்சுவார்த்தை கைவிடவே தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார்.

அயலான் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் சாய் பல்லவியுடன் சேர்ந்து தேசிங்கு பெரியசாமி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நிறைவுறும் தருவாயில் இருக்க தற்போது அடுத்த படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.

பூஜை புகைப்படம்

பூஜை புகைப்படம் - எக்ஸ்: ஏ.ஆர்.முருகதாஸ்

இந்தப் படத்தில் முதலில் மிருணாள் தாக்குர் நடிப்பதாக தகவல் வெளியான் நிலையில் தற்போது கன்னட நடிகை ருக்மணி வசந்தா ஜோடி சேர்ந்துள்ளார். சமீபத்தில் கன்னடத்தில் வெளியான சப்த சாகரதாச்சே எல்லோ திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பினை பெற்றது.

Story image

கன்னடத்தில் மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பூஜை புகைப்படங்களை இயக்குநர் முருகதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இசை- அனிருத், சண்டைப் பயிற்சி- திலீப் சுப்புராயன். எடிட்டிங்- ஸ்ரீகர் பிரசாத் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.