தனுஷ் - 50 படத்தின் பெயர் அறிவிப்பு!

தனுஷ் - 50 படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் தனுஷின் 50-வது படத்தின் பெயர் போஸ்டர் வெளியானது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், முக்கியக் கதாபாத்திரத்தில் சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது. கேங்க்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ராயன் எனப் பெயரிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com