தனுஷின் வருகை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா? திருமாவளவன் பதில்!
தனுஷின் வருகை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு திருமாவளவன் பதிலளித்தது குறித்து...

நடிகர் தனுஷ், விசிக தலைவர் திருமாவளவன் - கோப்புப்படம்
தனுஷின் வருகை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு விசிக தலைவரும் மக்களவை எம்.பியுமான தொல். திருமாவளவன் சனிக்கிழமை (அக். 24) பதிலளித்தார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன் பேசியதாவது:
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து அவரே எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை; சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. இதுகுறித்து முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தது குறித்து கேள்விக்கு, அதற்கு ஆதவ் அர்ஜுனாதான் பதிலளிக்க வேண்டும் என்றார்.
மேலும், சென்னையில் பெய்த மழையின்போது தவெக அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், அரசியலுக்குப் புதியவர்களாக இருந்தாலும் தங்களது சக்திக்கு ஏற்பப் போராடி மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். தவெக அரசின் நடவடிக்கைகளைப் பொதுமக்கள் வரவேற்றுப் பாராட்டி வருவதாகவும் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தவெக அரசு குறித்து விமர்சிப்பது தொடர்பான கேள்விக்கு, அதற்குத் தவெக தரப்பினர் பதிலளிப்பார்கள் என்று தொல். திருமாவளவன் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
VCK leader and Lok Sabha MP Thol. Thirumavalavan responded to a reporter's question on Saturday (Oct. 24) as to whether Dhanush's arrival would bring about a change in politics.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


