சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்தான் இடைத்தேர்தல் வெற்றி: தொல். திருமாவளவன்
இடைத்தேர்தல் வெற்றி குறித்து தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு பற்றி..
தொல். திருமாவளவன் - கோப்புப்படம்
சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்தான் இடைத்தேர்தல் வெற்றி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் 'மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி'யின் சார்பில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவரும் வெற்றி பெற்றிருப்பது இக்கூட்டணிக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகும்.
கடந்த பொதுத் தேர்தலில் இவ்விருதொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த தவெக, தற்போது கணிசமான வாக்குகளின் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது எமது கூட்டணியை மட்டுமின்றி, 'கூட்டணி அரசு' என்கிற தவெக தலைவர் ஜோசப் விஜய்யின் மகத்தான நிலைபாட்டையும் மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்பதையே உணர்த்துகிறது.
'விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் அணியேவெற்றி பெறும்' என்பதை உறுதிப்படுத்தும் வகையில், முழுமையான ஈடுபாட்டுடன் களப்பணி ஆற்றிடவேண்டுமென நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தவெக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சார்ந்த தோழர்களுடன் இணைந்து திறம்பட செயலாற்றிய என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் வாக்காளப் பொதுமக்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கூட்டணியின் நல்லாதரவோடு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் கூட்டணியின் தலைவர் ஜோசப் விஜய்க்கும் எமது வாழ்த்துகள்! என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Viduthalai Chiruthaigal Katchi (VCK) President Thol. Thirumavalavan has stated that the by-election victory is the people's recognition of the Social Justice Victory Alliance.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

