தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!

தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை என திருமாவளவன் தெரிவித்திருப்பது குறித்து...

Thol Thirumavalavan Birthday-CM Vijay wishes

முதல்வர் விஜய்-திருமாவளவன் - கோப்புப் படம்

Updated On :

தவெகவுக்கு வழங்கி வரும் ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை என மக்களவை உறுப்பினரும் விசிக தலைவருமான தொல். திருமாவளவன் புதன்கிழமை (நவ. 4) தெரிவித்தார்.

பாஜக ஆதரவோடு அதிமுகவும் திமுகவும் இணைந்து ஆட்சியமைக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் மீது மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருப்பதாவது:

அந்த முயற்சி நடக்கிறதா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்று நான் கருதுகிறேன். ஆதரவு நல்கி வருகிற கூட்டணிக் கட்சிகள் தவெகவுக்கு வழங்கி வரும் ஆதரவை திரும்பப் பெறப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.

காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடது சாரிகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை தங்களது ஆதரவைத் திரும்பப் பெறும் வாய்ப்பில்லை என்றபோது, ஆட்சியைக் கவிழ்க்கவும் வாய்ப்பில்லை என நான் பெரிதும் நம்புகிறேன். வேறு எந்த வழியில் அவர்கள் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது என்று தெரிவித்தார்.

மேலும், தவெக எம்எல்ஏக்களை வைத்தே ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடக்கிறதா? எனற கேள்விக்கு, “தவெக எம்எல்ஏக்கள் அந்த அளவுக்கு பலவீனமாக இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்” என திருமாவளவன் தெரிவித்தார்.

Summary

Lok Sabha member and VCK leader Thol. Thirumavalavan stated on Wednesday (Nov. 4) that he would not withdraw the support extended to TVK.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.