மு.க. ஸ்டாலின் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என சேகர்பாபுவிடம் சொன்னேன்! தொல். திருமாவளவன் ஆதங்கம்
தேர்தலில், மு.க. ஸ்டாலின் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என்று சேகர்பாபுவிடம் அப்போதே சொன்னேன் என தொல். திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

தொல். திருமாவளவன் - கோப்புப் படம்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அப்போதைய முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என்று ஒரு பெண் என்னைத் தொடர்பு கொண்டு சொன்னார், அது பற்றி சேகர்பாபுவிடம் அப்போதே எச்சரிக்கை விடுத்தேன் என்று தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் இன்று எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
எஸ்ஐஆர் நடவடிக்கையில் நடந்ததாகக் கூறப்படும் சதிவேலை குறித்து தொல். திருமாவளவன் இன்று மிகவும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வேலைகள் தொடங்கியபோது, ஒரு பெண் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கொளத்தூர் தொகுதியில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தோற்கடிக்கும் வேலை நடக்கிறது என்று கூறினார்.
அவர் மீண்டும் மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டு இதுப பற்றி பேசினார். அவரிடம் நான் சொன்னேன், முக்கியமான ஒருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன், அவரிடம் சொல்லுங்கள் என்றேன். சேகர்பாபுவிடம் அந்தப் பெண்ணை பேச வைத்தேன். நேரில் வரவழைத்துப் பேசினார். எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடமே பேசினேன். அண்ணா கொளத்துரில் ஒரு பிரச்னை இருக்கிறது என்று சொல்கிறார்கள். நீங்கள் ஏன் தொகுதி மாறி நிற்கக் கூடாது என்று சொன்னேன். ஆனால், அவரிடம் சேகர்பாபு, எஸ்ஐஆர் சரியாக செய்து கொண்டிருக்கிறோம் அதனால் ஒரு பிரச்னையும் இல்லை என்றார்.
தேர்தல் நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே இந்த எச்சரிக்கை நமது கவனத்துக்கு வந்துள்ளது. அப்போதும் மீண்டும் இது பற்றி சொன்னேன். இதையெல்லாம் இப்போது சொல்வது ஏன் என்றால், யார் மீதும் குற்றச்சாட்டை வைக்கும் நோக்கில் அல்ல.
மீண்டும் எச்சரிக்கை செய்வதற்காக அன்றைய முதல்வரிடம் இது பற்றி மீண்டும் பேசினேன். உங்களைக் குறி வைப்பதாக தகவல் வந்திருக்கிறது என்று சொன்னேன். மீண்டும் சேகர்பாபுவிடம் சொன்னேன். ஆனால், அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனால் எஸ்ஐஆரில் இரட்டைப் பதிவு என்று சொல்லி நீக்கியிருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் கூட இவ்வளவு நீக்கவில்லை, அதிக நீக்கம் செய்யப்பட்டது தமிழ்நாட்டில்தான். கொளத்துரில் இறந்தவர்கள் 20 ஆயிரம் பேர்தான், ஆனால், கொளத்தூரில் மட்டும் ஒரு லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 97 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே அதிகம், மேற்கு வங்கத்தை விட அதிகம். ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு எதிரான சதியல்ல, ஜனநாயகத்துக்கு எதிரான சதியல்லவா இது.
தேர்தல் முடிவு வந்த போதும், இவர்கள் தன்னியல்பாக தோற்றவர்கள் போல இல்லை, தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னேன் என்றும் திருமாவளவன் கூறினார்.
இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வர முடியாத மாநிலங்களில் முதல்வர்களாக இருந்த ஸ்டாலின், மமதா, கேஜரிவால், பினராயி தோற்கடிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பாஜகவால் முதல்வர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என்றும் திருமாவளவன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

