ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மயிலாடுதுறையில் நில அதிர்வா? - பொதுமக்கள் அதிர்ச்சி!

மயிலாடுதுறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :2 ஜூலை 2024, 7:40 am

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் விமான தளத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக ஜெட் விமான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தின்போது, ஜெட் விமானம் தாழ்வான பகுதிகளில் பறக்கும்போது நில அதிர்வு ஏற்படும் வாய்ப்புள்ளதாக க் கூறப்படுகிறது.

ஜெட் விமான சோதனை ஓட்டத்தின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பெரும்பலான பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்று மயிலாடுதுறை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.