பல தொடர்களை பின்னுக்குத் தள்ளிய புதிய சீரியல்: இந்த வார டிஆர்பி!

இந்த வாரம் எந்தெந்த தொடர்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளது என்பதைக் காணலாம்.
பல தொடர்களை பின்னுக்குத் தள்ளிய புதிய சீரியல்: இந்த வார டிஆர்பி!

திரைப்படங்களைப் போன்றே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களையும் ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர். அதிலும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முன்னிலையில் உள்ளது.

ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட தொடர்கள் எவை என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த தொடர்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளது என்பதைக் காணலாம்.

சென்ற வாரம் இரண்டாம் இடத்தில் இருந்த சிங்கப்பெண்ணே தொடர், இந்த வாரம் 9.29 டிஆர்பி புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கடந்த வாரம் முதல் இடத்தில் இருந்த கயல் தொடர் 9.23 டிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருமகள் தொடர், சென்ற வாரம் 4வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 8.12 டிஆர்பி புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பல தொடர்களை பின்னுக்குத் தள்ளிய புதிய சீரியல்: இந்த வார டிஆர்பி!
கண்மணி அன்போடு.. 'தமிழும் சரஸ்வதியும்' நடிகரின் புதிய தொடர்!

சென்ற வாரம் 3-வது இடத்தில் இருந்த வானத்தைப்போல தொடர் 8.00 டிஆர்பி புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

சிறகடிக்க ஆசை தொடர் 7.94 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து 5வது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com