
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவா தலையா தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே, வானத்தை போல, கயல், மருமகள் என ஏராளமான சீரியல்கள் டிஆர்பியில் முன்னணியில் உள்ளன.
இந்த நிலையில், நடிகை சித்தாரா நடிக்கும் தொடரான பூவா தலையா தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தொடரில் நடிகை சித்தாரா பாசமான அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ராம்ஜி, விஜய்பாபு, லதாராவ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு, சின்னத்திரையில் மீண்டும் சித்தாரா நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இத்தொடர் கடந்தாண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது.
தொடங்கி ஒரு வருடம்கூட ஆகாத பூவா தலையா தொடர், டிஆர்பியில் பின்தங்கி உள்ள காரணத்தினால் இத்தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.