பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டடத்தில் தீ விபத்து: வர்த்தகம் நிறுத்தம்!

பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வர்த்தகம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வர்த்தகம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

கராச்சியில் அமைந்துள்ள பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டடத்தின் நான்காவது மாடியில் திங்கள்கிழமை முற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது.

பங்குச் சந்தை கட்டடத்தில் இருந்த அனைவரையும் மீட்புப் படையினர் பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் வர்த்தகம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

கோப்புப்படம்
வலதுசாரிகளுக்கு எதிராக அமைந்த தேர்தல் முடிவுகள்: பிரான்ஸில் கலவரம்!

முதலில் பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டடத்தின் நான்காவது மாடியில் ஏற்பட்ட தீ, கட்டடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியதன் மூலம் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

மின்சார சர்க்யூட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விபத்து சம்பவத்தில் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com