விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு புதன்கிழமை காலை (ஜூலை 10) 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அன்னியூர் வாக்குச்சாவடி மையத்தில் முதல் வாக்காளராக தனது வாக்கினை பதிவு செய்த திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா.












