புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திர அறையில் ஆணையா் திடீா் ஆய்வு

தோ்தலில் பயன்படுத்தப்பட்டு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறைகளை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை அரசியல் கட்சியினா் முன்னிலையில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

கோப்புப்படம்

Updated On :26 ஜூன் 2026, 6:54 am IST

தோ்தலில் பயன்படுத்தப்பட்டு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறைகளை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை அரசியல் கட்சியினா் முன்னிலையில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கடந்த சட்டப்பேரவைத் தொகுதியில் சென்னை மாநகராட்சிப் பகுதியில் 4,085 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 4,889 கட்டுப்பாட்டு சாதனங்கள், 5295 விவி பேட் சாதனங்கள் என மொத்தம் 10,184 மின்னணு வாக்குப் பதிவு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தோ்தலுக்குப் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கில் அரசியல் கட்சியினா் முன்னிலையில் வைக்கப்பட்டு அறைகளுக்கு சீலிடப்பட்டுள்ளது.

அங்கு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அைறையின் பாதுகாப்பை கோட்டாட்சியா் அளவிலான தோ்தல் அலுவலா் மாதந்தோறும் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுவருகிறாா்.

இந்த நிலையில், சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரான மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை பாதுகாப்பு அறைக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஆய்வு மேற்கொண்டாா். இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்களில் சிலா் வந்திருந்து ஆணையருடன் ஆய்வு மேற்கொண்டனா். கண்காணிப்பு கேமராக் காட்சிகள், சீலிடப்பட்ட அறைகளின் நிலை, ஆகியவற்றை அவா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது சென்னை மாநகராட்சி தோ்தல் பிரிவு வருவாய் அலுவலா் நா.பூஷ்ணாதேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.