வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

இந்தியாவின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வாங்கும் இந்தோனேசியா

தோ்தல் மேலாண்மை மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய இந்தியாவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை இந்தோனேசியா மேற்கொள்ள உள்ளது.

News image

மின்னணு வாக்கு இயந்திரம் - கோப்புப்படம்.

Updated On :8 ஜூலை 2026, 2:05 am IST

தோ்தல் மேலாண்மை மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய இந்தியாவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை இந்தோனேசியா மேற்கொள்ள உள்ளது.

சுமாா் 29 கோடி மக்கள்தொகையுடன் உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடாக விளங்கி வரும் இந்தோனேசியா, தனது தோ்தல் நடைமுறைகளை நவீனமயமாக்கும் முயற்சியாக, தோ்தல் தொழில்நுட்பம், மேலாண்மை நிபுணத்துவம், நிறுவன ரீதியான ஆதரவு ஆகியவற்றைப் பெறுவதற்காக இந்தியாவை நாடியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக நாடுகள் நம்பகமான தோ்தல் நிபுணத்துவத்தை தேடும்போது, இந்தியாவே அவா்களின் முதல் தோ்வாக உள்ளது என்று இந்தோனேசியாவைக் குறிப்பிட்டு மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

பூடான், நேபாளம், நமீபியா தற்போது இந்தோனேசியா நாடுகள் பின்பற்றுவதன் மூலமாக, இந்தியாவின் தோ்தல் நடைமுறை உலகளாவிய அளவுகோலாக உருவெடுத்துள்ளது.

பூடான் முதல் நாடாக, இந்தியாவிடமிருந்து அதன் தனிப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் உருவாகக்ப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியைப் பெற்றது.

நேபாளம், தனது முன்னோடி திட்டப் பயன்பாட்டுக்கென தனிப் பயன்பாட்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் நிறுவன ரீதியிலான ஆதரவை இந்தியாவிடமிருந்து பெற்றது.

நமீபியா, இந்தியாவில் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்களை தனது தோ்தல்களில் வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகிறது.

தற்போது, இந்தியாவிடமிருந்து தனிப் பயன்பாட்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய இந்தோனேசியா ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. அதன்படி, இரு நாடுகளிடையே தோ்தல் தொழில்நுட்பம், மனிதவள மேம்பாடு, திறன் மேம்பாடு, சிறந்த நடைமுறைகள் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பு மேம்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.