முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று(ஜூலை 12) தலைமைச் செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளன் சந்தித்துப் பேசினார்.
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களுடன் பேசுகையில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினேன். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க பாஜக போன்ற சில அரசியல் கட்சிகள் முயற்சி செய்கின்றன.
காவல் துறை விசாரிப்பதற்கு முன்னதாகவே, சிபிஐ விசாரணையை பாஜக கோரியது ஏன்? ஆருத்ரா முறைகேட்டில் பாஜகவினர் சிலருக்கு தொடர்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.