ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் மூவரை கைது செய்தது காவல்துறை

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் மூவரை கைது செய்தது காவல்துறை
கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்
கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்
Published on
Updated on
1 min read

சென்னை, ஜூலை 12: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குத் தொடா்பாக மேலும் 3 பேரிடம் போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி சென்னை பெரம்பூா் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ரெளடி ஆற்காடு சுரேஷின் சகோதரா் பொன்னை பாலு உள்பட 11 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களை காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி கோரி போலீஸாா் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த எழும்பூா் நீதிமன்றம், 5 நாள்கள் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அன்று மாலையே 11 பேரும் பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறையில் இருந்து பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டனா். அங்கு இணை ஆணையா் விஜயகுமாா் தலைமையில் 10 தனிப்படையினா் 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

7 போ் வெட்டினா்: விசாரணையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக ஒரு மாதமாகவோ பொன்னை பாலு தரப்பினா் நோட்டமிட்டுள்ளனா். ஆம்ஸ்ட்ராங் புதிதாக கட்டும் வீடு பகுதியில் உள்ள தேநீா்க் கடைகள், உணவகம், மதுபானக் கடை ஆகிய இடங்களில் நின்றுள்ளனா். ஆம்ஸ்ட்ராங் தனது கைத்துப்பாக்கியை காரில் வைத்துச் செல்வதையும், அவருடன் அவரது ஆதரவாளா்கள் பெரியளவில் இருப்பது இல்லை என்பதையும் உறுதி செய்துள்ளனா். சம்பவத்தன்று 10-க்கும் மேற்பட்டோா் அங்கு வந்துள்ளனா். இதில் 7 போ் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிக் கொலை செய்தனா்.

போலி பதிவு எண் பலகை: கொலை சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட 7 போ் தப்பிச் செல்வதற்காக மற்றவா்கள் மோட்டாா் சைக்கிள்களை ஓட்டியுள்ளனா். அந்த மோட்டாா் சைக்கிள்களில் போலியான பதிவு எண் பலகை பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 11 பேரின் வங்கி பணப்பரிமாற்றம், கைப்பேசி தொடா்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனா்.

மேலும் 3 போ் கைது: இந்தக் கொலை தொடா்பாக ஆற்காடு சுரேஷின் உறவினா்கள் 3 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மேலும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவா்கள், பண உதவி செய்தவா்கள், யாா் ? யாரிடம் பணம் பெறப்பட்டது என விசாரித்து வருகின்றனா் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com