
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைக் கொடுத்தது. ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் படத்தின் தூணாக இருந்தார்.
தொடர்ந்து, தங்கலான் படத்தில் இணைந்தார். கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்த நிலையில், பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தங்கலான் டிரைலர் முன்னதாக வெளியாகி, நடிகர் விக்ரமின் தோற்றமும் ஆக்சன் காட்சிகளும் பெரிதாகப் பேசப்பட்டது.
இந்த நிலையில் தங்கலான் படத்தின் முதல் பாடலான 'மினிக்கி மினிக்கி’ பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இப்பாடலை சிந்தூரி விஷால் பாடியுள்ளார். பாடலுக்கான வரிகளை உமா தேவி எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.