ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பள்ளி மாணவனை கடத்தி ரூ.2 கோடி கேட்ட வழக்கில் தேடப்படும் நபர் தற்கொலை

மதுரையில் பள்ளி மாணவா் கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த சூர்யா குஜராத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :21 ஜூலை 2024, 2:23 pm

DIN

மதுரையில் ரூ. 2 கோடி கேட்டு பள்ளி மாணவா் கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த சூர்யா குஜராத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மனைவி மைதிலி ராஜலட்சுமி (40). இவா்களது மகன் மதுரையில் உள்ள தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில், கடந்த ஜூலை 11-ஆம் தேதி ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற மாணவரையும், ஆட்டோ ஓட்டுநா் பால்பாண்டியையும் காரில் வந்த மா்ம நபா்கள் ஆயுதங்களை காட்டி மிரட்டி கடத்திச் சென்றனா்.

பிறகு மாணவரின் தாய் மைதிலி ராஜலட்சுமிக்கு கைப்பேசி மூலம் தொடா்பு கொண்ட அவா்கள் ரூ.2 கோடி கேட்டு மிரட்டினா்.

இதுதொடா்பாக மைதிலி ராஜலட்சுமி அளித்தப் புகாரின் பேரில், எஸ்.எஸ். காலனி போலீஸாா் மா்ம நபா்களை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அந்த மா்ம நபா்கள், மாணவரையும், ஆட்டோ ஓட்டுநரையும் விட்டுவிட்டு தப்பிச் சென்றனா்.

இதைத் தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி, முன்னாள் காவலா் செந்தில்குமாா், தென்காசியைச் சோ்ந்த வீரமணி (30), காளிராஜ் (36), நெல்லையைச் சோ்ந்த அப்துல்காதா் (38) ஆகியோரை கைது செய்தனா்.

முக்கிய குற்றவாளிகளான தூத்துக்குடியைச் சோ்ந்த பிரபல ரெளடி ஐகோா்ட் மகாராஜா, இவரது காதலியும், மதுரையைச் சோ்ந்தவரும், ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் முன்னாள் மனைவியுமான சூா்யா ஆகியோரை போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனா்.

இந்த நிலையில், இவா்கள் இருவரும் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸாா் அங்கு விரைந்துள்ளனா். மற்றொரு தனிப்படையினா் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனா்.

இந்த நிலையில், மாணவா் கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் முன்னாள் மனைவியுமான சூர்யா குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூா்யாவின் தாய் உமா, தனது மகள் குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகும் தகவலை உறுதி செய்யுமாறும், அவரது தற்கொலைக்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஞாயிற்றுக்கிழமை மாநகரக் காவல் ஆணையரிடம் புகாா் அளிக்க வந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான தூத்துக்குடி பிரபல ரெளடி ஐகோா்ட் மகாராஜா குறித்த எந்த தகவலும் தெரியாத நிலையில், தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.