ஆவணி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்புஉச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

கிருஷ்ணகிரி அருகே ஒற்றை யானை தாக்கி வன காவலர் காயம்

கிருஷ்ணகிரி அருகே ஒற்றை யானை தாக்கி வன காவலர் காயமடைந்தார்.

News image

ஒட்டையானூர் கிராமப் பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றை யானை(கோப்புப்படம்)

Updated On :25 ஜூலை 2024, 10:25 am IST

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ஒற்றை யானை தாக்கி வன காவலர் காயமடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒட்டையானூர் கிராமப் பகுதியில் ஒற்றை யானை சுற்றித்திரியும் ஒற்றை யானை விவசாயிகள் பயிா் செய்துள்ள பயிா்களை சேதப்படுத்தி வருகின்றது. இந்த யானையை வனத்துறையினா் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், ஓசூர் வனக்கோட்டத்தில் வனக்காவலராக பணியாற்றி வரும் பெரியகுதிபாலா கிராமத்தைச் சேர்ந்த க.நரசிம்மன் (50), வியாழக்கிழமை காலை வனத்துறையினருடன் சேர்ந்து ஒட்டையானூர் கிராமப் பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த யானை அவரை துதிக்கையால் தலையில் தாக்கியது. இதில் காயமடைந்த அவர் மயக்கம் முற்றார்.

இதையடுத்து வனத்துறையினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் ஒற்றை யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.