சீனாவில் நடந்துசென்றவர்கள் மீது வாகனம் மோதியதில் 8 பேர் பலி
சீனாவில் நடந்துசென்றவர்கள் மீது வாகனம் மோதிய விபத்தில் 8 பேர் பலியானார்கள்.


சீனாவில் நடந்துசென்றவர்கள் மீது வாகனம் மோதிய விபத்தில் 8 பேர் பலியானார்கள்.
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் சனிக்கிழமை நடந்துசென்றவர்கள் மீது வாகனம் மோதியது. இந்த சம்பவத்தில் 8 பேர் பலியானார்கள். 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாநகர பொது பாதுகாப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதில் இருவர் படுகாயங்களுடனும், 3 பேர் லேசான காயங்களுடனும் உள்ளனர். இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் 55 வயதுடைய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர் வேண்டுமென்றே வாகனத்தை கூட்டத்தின் மீது மோதினாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
சீனாவில் பெரும்பாலான விபத்துகள் போக்குவரத்து விதிகளை மீறுவதாலேயே நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...