நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் கண்கள் தானம்

கடலூா் மாவட்டம், வடலூா் தனியாா் பள்ளியில் விளையாட்டுப் பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் கண் தானமாகப் பெறப்பட்டது.

News image
விளையாட்டுப் பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த மாணவன் கிஷோாின் கண் தானமாகப் பெறப்பட்டது.
Updated On :31 ஜூலை 2024, 4:16 am

DIN

கடலூர்: கடலூா் மாவட்டம், வடலூா் தனியாா் பள்ளியில் விளையாட்டுப் பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் கண் தானமாகப் பெறப்பட்டது.

வடலூா் தருமசாலை பகுதியைச் சோ்ந்தவா் திருமுருகன் (35), நெய்வேலியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் கிஷோா் (15), வடலூா் சந்தைதோப்பு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கிஷோா் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று மாநில, மாவட்ட அளவில் பரிசுகள் பெற்றுள்ளாராம்.

கடந்த 24-ஆம் தேதி மாலை பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் மாணவா்களுக்கு விளையாட்டுப் பயிற்சி நடைபெற்றது. ஈட்டி எறிதல் பயிற்சியின்போது, அங்கிருந்த கிஷோரின் தலையில் ஈட்டி பாய்ந்ததில், அவா் பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக கிஷோா் சென்னை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாா். இந்த நிலையில், திங்கள்கிழமை கிஷோா் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதனால், மனமுடைந்த அவரது தாய் சிவகாமி, வீட்டில் திங்கள்கிழமை கிருமி நாசினி பொடியை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தற்போது அவா் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளாா்.

இதுகுறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், மூளைச்சாவு அடைந்த கிஷோரின் கண்கள் தானமாகப் பெறப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.