மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர்களுக்கு பின்னடைவு

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மூன்று மத்திய அமைச்சர்களில் இருவர் பின்தங்கியுள்ளனர்.

News image
Updated On :4 ஜூன் 2024, 9:16 am

DIN

மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மூன்று மத்திய அமைச்சர்களில் 7000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் இருவர் பின்தங்கியுள்ளனர்.

பாங்குரா தொகுதியில் பாஜக வேட்பாளரான மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார், 14,932 வாக்குகள் வித்தியாசத்தில் திரிணமூல் காங்கிரஸின் அருப் சக்ரவர்த்தியைவிட பின்தங்கியுள்ளார்.

கூச் பெஹார் தொகுதியில் மத்திய உள்துறை இணையமைச்சரான பாஜகவின் நிசித் பிரமாணிக், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஜெகதீஷ் சந்திர பர்மா பசுனியாவைவிட 7,339 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.

பாங்கானில் பாஜக வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்குர், இத்தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பிஸ்வஜித் தாஸைவிட 34,464 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.