விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

’சத்தியமே லட்சியமாய் கொள்ளடா': தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து!

மக்களவைத் தேர்தலில் அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தோல்வி குறித்து தனது கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

News image
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)
Updated On :4 ஜூன் 2024, 2:48 pm

DIN

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்து அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமூக வலைத்தளங்களில் தேர்தல் தோல்வி குறித்து தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

அந்தப் பதிவில், “நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரச்சார பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதகமாக வந்திருக்கின்றன.

தற்போது வெளிவந்துள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, அஇஅதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், “எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை இடரவைத்து, தள்ளப் பார்க்கும் குழியிலே அத்தனையும் தாண்டி காலை முன் வையடா - நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா! சத்தியமே லட்சியமாய் கொள்ளடா" என்னும் எம்ஜிஆரின் பாடல் வரிகளைக் குறிப்பிட்டு அவை நமக்கு என்றைக்கும் வழிகாட்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.