பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மைசூர் மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்தா வெற்றி

மைசூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ உடையார் வெற்றி பெற்றார்.

News image
Updated On :4 ஜூன் 2024, 2:57 pm

DIN

பாஜக சார்பில் போட்டியிட்ட மைசூர் அரச குடும்பத்தின் வாரிசு யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ உடையார் மற்றும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி, கே.சுதாகர் ஆகியோர் கர்நாடகாவில் வெற்றி பெற்றுள்ளனர்.

மைசூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட மைசூர் மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ உடையார் 1,39,262 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பாஜக சார்பில் போட்டியிட்ட யதுவீர் கிருஷ்ணதத்தாவுக்கு 7,95,503 வாக்குகளும், காங்கிரஸின் எம்.லட்சுமணனுக்கு 6,56,241 வாக்குகளும் கிடைத்தன.

கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி, உடுப்பி-சிக்மகளூர் தொகுதியில் 2,59,175 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

முந்தைய பாஜக அரசில் அமைச்சராக இருந்த கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரிக்கு 7,32,234 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் ஜெயப்பிரகாஷ் ஹெக்டேவுக்கு 4,73,059 வாக்குகளும் கிடைத்தன.

சிக்கபள்ளாப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட சுதாகர் 1,63,460 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பாஜகவைச் சேர்ந்த சுதாகருக்கு 8,22,619 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் ரக்ஷா ராமையாவுக்கு 6,59,159 வாக்குகளும் கிடைத்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.