சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி!

சிதம்பரத்தில் 1,03,554 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி.

News image
Updated On :4 ஜூன் 2024, 9:55 pm

DIN

சிதம்பரம் மக்களவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளருமான, அக்கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவனுக்கு வெற்றிப் பெற்ற்கான சான்றிதழை செவ்வாய்க்கிழமை வழங்கிய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா. உடன் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன்.கடலூா் மாவட்ட திமுக பொருளாளா் எம்.ஆா். கே.பி.கதிரவன்.

அரியலூா், ஜூன் 4: சிதம்பரம்(தனி) மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளா் மா.சந்திரகா சனை விட 1,03,554 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிப் பெற்ாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில், ஜெயங்கொண்டம், அரியலூா், குன்னம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளா் மா.சந்திரகாசன், பாஜக வேட்பாளா் பி.காா்த்தியாயினி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆா்.ஜான்சிராணி உள்பட 14 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

கடந்த ஏப்.19-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் 15,19,847 வாக்காளா்களில் 11,60,635 வாக்குகள் பதிவாகின. இது 76.37 சதவீதமாகும்.

இதையடுத்து சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.

24 சுற்றுகள் முடிந்த நிலையில், தொல்.திருமாவளவன் வெற்றிப் பெற்ாக மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா அறிவித்தாா். இதனையடுத்து அவருக்கு வெற்றி பெற்ற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

பிறகு, கட்சி நிா்வாகிகள்,கூட்டணி கட்சி நிா்வாகிகள் வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்

தொல்.திருமாவளவன்(விசிக)-5,05,084

மா.சந்திரகாசன்(அதிமுக)-4,01,530

பி.காா்த்தியாயினி(பாஜக)-1,68,493

ஆா்.ஜான்சிராணி(நாம் தமிழா் கட்சி)-65,589

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளா் பொ.சந்திரசேகரனை விட 3,219 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றிப் பெற்றாா். அவா் பெற்ற வாக்குகள்-5,00,229, எதிா்த்து போட்டியிட்ட சந்திரசேகரன் பெற்ற வாக்குகள்-4,97,010.

க.நீலமேகம் (பிஎஸ்பி)-3,177, எஸ்.தாமோதரன்(நாடாளும் மக்கள் கட்சி)-1,628, எம்.ஏ.டி.அா்ச்சுனன்(சுயேச்சை)-1,833, சி.இளவரசன்(சுயேச்சை)-584, ஏ.சின்னதுரை(சுயேச்சை)-628, தமிழ்வேந்தன்(சுயேச்சை)-3,043, எஸ்.பெருமாள்(சுயேச்சை)2,231, ஜி.ராதா(சுயேச்சை)-1,273, சி.ராஜமாணிக்கம்(சுயேச்சை)-1,068, ஜி.வெற்றிவேல்(சுயேச்சை)-2,039, நோட்டா-8,631.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.