824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

இந்தியாவுக்கு 111 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அமெரிக்கா!

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 111 ரன்கள் இலக்காக அமெரிக்கா அணி நிர்ணயித்துள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2024, 4:12 pm

DIN

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்ற லீக் சுற்றின் 25-வது போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், அமெரிக்காவும் மோதுகின்றன.

நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூன் 12) நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பௌலிங் தேர்வு செய்தார்.

டாஸைத் தொடர்ந்து அமெரிக்க அணி தரப்பில் ஷயான் ஜஹாங்கீர் மற்றும் ஸ்டீவன் டெய்லர் ஆகியோர் களம் புகுந்தனர். அமெரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்தை எதிர்கொண்ட ஜஹாங்கீரின் ஸ்டெம்பை பதம் பார்த்தது. அதே ஓவரின் கடைசி பந்தில் ஆண்டிரியஸ் கோயஸ் ஹர்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் மற்றொரு புறம் ஸ்டீவன் 2 சிக்ஸருடன் 24 ரன்னும், நிதிஸ் குமார் 2 ஃபோர், 1 சிக்ஸருடன் 27 ரன்னும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளும், ஹார்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும், அக்‌ஷர் படேல் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் அமெரிக்கா அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது.

111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.