டி20 உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே திடலில் இன்று (பிப்ரவரி 7) நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
அதிர்ச்சியளித்த அமெரிக்கா; காப்பாற்றிய சூர்யகுமார் யாதவ்!
முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது.
தொடக்கம் முதலே அமெரிக்க அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் அற்புதமாக பந்துவீசினர். பவர் பிளேவில் இந்திய அணியால் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியவில்லை. அதிரடி ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா அவர் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
அதன் பின், திலக் வர்மா மற்றும் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இஷான் கிஷன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை தவிர்த்து, நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். ஒரு முனையில் சூர்யகுமார் நிதானமாக விளையாடினாலும், மறுமுனையில் இந்திய அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஷிவம் துபே (0 ரன்), ரிங்கு சிங் (6 ரன்கள்), ஹார்திக் பாண்டியா (5 ரன்கள்), அக்ஷர் படேல் (14 ரன்கள்) எடுத்து பெவிலியன் திரும்பினர். ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசி அசத்தினார்.
ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடி அவர் சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதிரடியாக விளையாடிய அவர் 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
அமெரிக்கா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷாட்லி வான் 4 விக்கெட்டுகளையும், ஹர்மீத் சிங் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அலி கான் மற்றும் முகமது மோஹ்சின் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அமெரிக்க அணி விளையாடி வருகிறது.
Summary
In the T20 World Cup match against the USA, the Indian team, batting first, scored 161 runs for the loss of 9 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெஸ்ஸிக்குக் காயம்..! கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடுவாரா?

17 சராசரியுடன் விளையாடும் சூர்யகுமார் யாதவ்..! இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்படுவாரா?

பெண் குழந்தைக்கு தந்தையானார் சூர்யகுமார் யாதவ்!
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




