திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

டி20 உலகக் கோப்பை அறிமுகப் போட்டியில் அபிஷேக் சர்மா கோல்டன் டக்!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா டி20 உலகக் கோப்பைத் தொடரில் அவரது அறிமுகப் போட்டியில் அவர் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.

News image

அபிஷேக் சர்மா - படம் | பிசிசிஐ

Updated On :7 பிப்ரவரி 2026, 7:39 pm IST

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா டி20 உலகக் கோப்பைத் தொடரில் அவரது அறிமுகப் போட்டியில் அவர் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது.

அறிமுகப் போட்டியில் கோல்டன் டக்!

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். அதிரடி ஆட்டத்துக்கு சொந்தக்காரரான அபிஷேக் சர்மா அவர் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

அமெரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளரான அலி கான் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டினை வீழ்த்தினார். அமெரிக்க அணி அபிஷேக் சர்மாவுக்கென சரியான இடத்தில் ஃபீல்டிங்கை நிறுத்தி அவரது விக்கெட்டினைக் கைப்பற்றியது.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிரடியில் மிரட்டி வரும் அபிஷேக் சர்மா, அவரது டி20 உலகக் கோப்பைத் தொடர் பயணத்தை கோல்டன் டக்கில் தொடங்கியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை அறிமுகப் போட்டியில் டக் அவுட்டான இந்திய வீரர்கள்

கௌதம் கம்பீர்

ஆஷிஷ் நெஹ்ரா*

ஷர்துல் தாக்குர்

தீபக் ஹூடா

அபிஷேக் சர்மா*

(* - கோல்டன் டக்)

Summary

Indian opener Abhishek Sharma was dismissed for a duck on the very first ball he faced in his debut match at the T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.