வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அய்யலூர் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

News image
கோப்புப்படம்
Updated On :13 ஜூன் 2024, 3:12 am

DIN

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், திருப்புவனத்தில் அய்யலூரில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

வருகிற 17-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து ஆடு வளா்ப்பவா்களும், ஆட்டு வியாபாரிகளும் ஆயிரக்கணக்கான செம்மறி, வெள்ளாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.

இதேபோல, ஆடுகளை வாங்க வந்த வியாபாரிகளும் இஸ்லாமியா்களும் சந்தையில் திரண்டதால் சந்தை களைக்கட்டியது. ஆட்டின் எடைக்கு ஏற்றவாறு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் 1 கிலோ ஆட்டுக்கறி ரூ.700-க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விலை உயர்ந்து விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.