பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஓடிடியில் குரங்கு பெடல்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான குரங்கு பெடல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

News image
Updated On :14 ஜூன் 2024, 12:32 pm

DIN

சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் புரோடக்‌ஷன் என்ற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.

இந்நிறுவனத்தின் மூலம் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இதனையடுத்து, சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் கடந்த மாதம் வெளியான புதிய திரைப்படம் 'குரங்கு பெடல்'. இப்படத்தை கமலகண்ணன் இயக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Story image

இப்படத்தில் சந்தோஷ் வேல்முருகன், விஆர் ராகவன், ஞானசேகர், ரத்திஷ், சாய் கனேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

சைக்கிள் ஓட்டுவதற்கு கற்றுக்கொள்ளும் 5 சிறுவர்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குரங்கு பெடல் திரைப்படம் தற்போது ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.