தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து....

News image

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

சித்திரிப்பு / விஜய்

Updated On :19 மார்ச் 2026, 2:09 pm
Updated On :19 மார்ச் 2026, 2:09 pm

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

1சீதா பயணம்

சீதா பயணம் போஸ்டர்

சீதா பயணம் போஸ்டர்

அர்ஜுன் இயக்கத்தில் வெளியான சீதா பயணம் படம் இன்று(மார்ச் 19) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் அர்ஜுன், துருவ சார்ஜா, ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன், பிரகாஷ் ராஜ், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

2ஃப்ளோர் ஃப்ளோர்

Listicle image

ஆரியின் போர்த் ஃப்ளோர் திரைப்படம் நாளை(மார்ச் 20) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

நாயகனாக ஆரி அர்ஜுனன் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் சுப்பிரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்தியா கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

3வளவாரா

Listicle image

கன்னட மொழிப்படமான வளவாரா படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.

காணாமல் போன பசுவைத் தேடி கண்டுபிடிக்கும் சிறுவர்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

4காசர்கோட் எம்பஸி

Listicle image

மலையாள மொழியில் எடுக்கப்பட்டுள்ள காசர்கோட் எம்பஸி இணையத் தொடர் நாளை ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.

இந்தத் தொடரில் அபு சலீம், கபீர் துஹான் சிங் மற்றும் தீபக் பரம்போல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆதிஷ் எம். நாயர் இயக்கியுள்ளார்.

5லேன்ட்லார்டு

Listicle image

கன்னட மொழியில் வெளியான அதிரடித் திரைப்படமான லேன்ட்லார்டு திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது.

முதலாளித்துவத்தால் பாதிக்கப்படும் குடும்பங்கள் குறித்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

6பூக்கி

Listicle image

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் உருவான புதிய படம் ’பூக்கி’. இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கிய இந்தப் படத்தின் மூலம் நடிகர் அஜய் திஷான் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

‘பூக்கி’ திரைப்படம் ஜீ5 ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் காணக் கிடைக்கிறது.

7யோகிடா

Listicle image

கெளதம் கிருஷ்ணா இயக்கத்தில் சாய் தன்ஷிகா பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள படம் யோகிடா.

அதிரடி பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ஆஹா ஓடிடியில் பார்க்கலாம்.

8ஃப்ரைடே

Listicle image

ரெளடிகளின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் ஃப்ரைடே. இந்தப் படத்தில் தீனா, மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

9ஃபங்கி

Listicle image

கே.வி. அனுதீப் இயக்கத்தில், விஷ்வக் சென் மற்றும் கயாது லோஹர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஃபங்கி.

ஃபங்கி திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் காணலாம்.

10கஃபுள் பிரண்ட்லி

Listicle image

இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் சோபன், மானசி வாரணாசி நடிப்பில் உருவான காதல் திரைப்படம் கஃபுள் பிரண்ட்லி.

இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் தமிழ், தெலுங்கு மொழிகளில் பார்க்கலாம்.

11மேட் இன் கொரியா

Listicle image

இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் மேட் இன் கொரியா. இதில், நாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் காணலாம்.

12லாக் டவுன்

Listicle image

கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நடிகை அனுபமாவின் லாக் டவுன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

இப்படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். இதில், நடிகர்கள் சார்லி, நிரோஷா, மஹானா சஞ்சீவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

13பார்த்தா மஹா சையுலகு விங்யாப்தி

Listicle image

ரவி தேஜா நடிப்பில் வெளியான நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம் பார்த்தா மஹா சையுலகு விங்யாப்தி.

இந்தப் படத்தை ஜீ5 ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் காணலாம்.

Summary

You can see which movies are releasing this week on OTT platforms.

ஜன நாயகன் ஒப்பந்தம் ரத்து? ரூ. 120 கோடி திருப்பிக் கேட்கும் ஓடிடி நிறுவனம்!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.