

சண்டிகர்: பஞ்சாபின் மாநிலம் அமிருதசரஸில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சா்வதேச எல்லை அருகே எல்லைக்கு அருகிலுள்ள வயல்வெளியில் இருந்து ட்ரோன் மற்றும் அதனுடன் கட்டப்பட்டிருந்த போதைப்பொருள்கள் மீட்கப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை தெரிவித்தார்.
இது தொடா்பாக பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சா்வதேச எல்லை அருகே பிஎஸ்எஃப் படையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள வயல்வெளியில் இருந்து ஆளில்லா விமானம்(ட்ரோன்) மற்றும் போதைப்பொருள்கள் (ஹெராயின் பாக்கெட்) கண்டறியப்பட்டு துணை ராணுவப் படையினர் மீட்டனர்.
தகவல் அறிந்ததும், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பஞ்சாப் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் போது, சீனாவில் தயாரிக்கப்பட்ட அந்த ட்ரோன் மற்றும் அதனுடன் கட்டப்பட்டிருந்த 557 கிராம் எடை கொண்ட போதைப்பொருள் கஹன்கர் கிராமத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.