சாலையில் காரை பழுதுபார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 2 பேர் பலி!

செங்கல்பட்டு பைபாஸ் அருகே கார் பழுதுபார்த்துக் கொண்டிருந்த இருவர் மீது, அதிவேகமாக வந்த கார் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சாலையில் காரை பழுதுபார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 2 பேர் பலி!
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பைபாஸ் அருகே கார் பழுதுபார்த்துக் கொண்டிருந்த இருவர் மீது, அதிவேகமாக வந்த கார் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மயிலாடுதுறை தாலுக்கா, மல்லியம் போஸ்ட் ஆனைமலை அகரம் கீழத் தெருவைச் சேர்ந்த ஜாஃபர் அலி என்பவரின் மகன் ரியாசுதீன் (38)என்பவர், துபைச் செல்வதற்காக சென்னை விமான நிலையம் நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்தார்.

மயிலாடுதுறை தாலுக்கா, குத்தாலம் மாதிரி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு (41) என்பவர் காரை ஓட்டிச் சென்றார். காரில் துபைச் செல்ல இருந்த ரியாசுதீன் தனது நண்பர்களான மயிலாடுதுறை தாலுகா, மல்லியம் மெயின் ரோட்டைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் ஐயப்பன் ( 38), மயிலாடுதுறை தாலுக்கா, மல்லியம் கிராமத்தைச் சேர்ந்த கமால் பாட்ஷா என்பவரின் மகன் அன்வர் சாதிக் ( 38) ஆகியோருடன் சென்றுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், செங்கல்பட்டு பழவேலி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, காரின் டயர் பஞ்சர் ஆனதால், ஓட்டுநர் சந்துரு காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, டயரை மாற்றிக் கொண்டிருந்தார்.

சாலையில் காரை பழுதுபார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 2 பேர் பலி!
2014க்கு பின் சராசரியாக ஒரு மாதத்தில் 11 ரயில் விபத்துகள்! காங். குற்றச்சாட்டு

அப்போது, ஓட்டுநர் சந்துருவுக்கு உதவியாக துபைச் செல்ல இருந்த ரியாசுதீனும், காரை விட்டு இறங்கி ஓட்டுநருக்கு உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் பின்னால் இருந்து அதிவேகமாக வந்த கார், காரைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்த இருவர் மீது மோதியது.

இந்த விபத்தில் ரியாசுதீன் மற்றும் சந்துரு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காரில் உடன் சென்ற மற்ற இரண்டு நபர்களும் காயம் ஏதுமின்றி தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு கிராமிய காவல் துறையினர், விபத்தில் இறந்த இருவரின் உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்விபத்து குறித்து செங்கல்பட்டு கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற காரின் ஓட்டுநரையும் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com