ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!விஜய் பிரதமராவது தவெகவினர் ஆசை; சீரியஸாக எடுக்க வேண்டாம்! பெ. சண்முகம்இனி நியாய விலைக் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை! ஆனால்?நேபாள வெள்ளம்! பலி 1,000-ஐ கடந்தது! 3,900 பேரை தேடும் பணி தீவிரம்! மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!

கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படை!

கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கோப்புப்படம்

Published On :18 ஜூன் 2024, 8:31 am IST

புதுக்கோட்டை: எல்லைதாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து திங்கள்கிழமை 241 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

இதில் கோட்டைப்பட்டினம் சிபிராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32), முரளி (42), சாரதி (28), ராமதாஸ் (52) ஆகிய 4 பேர் செவ்வாய்க்கிழமை அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.