74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

’விடாமுயற்சி’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு: சாகசக் காட்சிகளில் மிரட்டும் அஜித்!

அஜர்பைஜான் நாட்டில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

News image

விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித்குமார் - படம் | சுரேஷ் சந்திரா எக்ஸ் தளப் பதிவு

Updated On :24 ஜூன் 2024, 9:29 pm IST

நடிகர் அஜித் அதிரடி சாகச காட்சிகளுக்கும் டூப் போடாமல் நடிக்கும் காட்சிகள் அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டு வருகின்றன.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது.

’மங்காத்தா’ படத்துக்குப் பின், நடிகர் அர்ஜுன் இத்திரைப்படத்தில் அஜித்குமாருடன் மீண்டும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் ஆரவ், ரெஜினா, சஞ்சய் தத், அருண் விஜய் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது. தீபாவளிக்கு படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

இந்த நிலையில், அஜர்பைஜான் நாட்டில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தகவலை நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று(ஜூன் 24) பதிவிட்டுள்ளார்.

அதிரடி சாகசங்களுடன் நிறைந்த சண்டைக் காட்சிகள் அஜர்பைஜானில் கொளுத்தும் வெயிலில் படமாக்கப்பட்டு வரும் விடியோவை அவர் பகிர்ந்துள்ளார். அதில் படத்தின் கதாநாயகன் அஜித்குமார் மிக ஆபத்தான காட்சிகளுக்கும் டூப் போடாமல் நடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு கவனத்தை ஈர்த்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.