தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கூடலூரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை!

கூடலூரில் வெள்ளிக்கிழமை காலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காட்டு யானை ஒன்று அடித்துச்செல்லப்பட்டதை பார்த்தவர்கள் பதற்றத்துடன் கூச்சலிட்டனர்.

News image

கூடலூரில் வெள்ளிக்கிழமை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச்செல்லப்பட்ட காட்டு யானை.

Updated On :28 ஜூன் 2024, 7:12 am

கூடலூர்: கூடலூரில் வெள்ளிக்கிழமை காலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காட்டு யானை ஒன்று அடித்துச் செல்லப்பட்டதை பார்த்தவர்கள் பதற்றத்துடன் கூச்சலிட்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓவேலி மலைத் தொடரிலிருந்து அதிகளவு நீர் வருவதால் பாண்டியாற்றில் அதிகயளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

இந்த நிலையில், ஓவேலி பகுதியிலிருந்து வந்த யானைக் கூட்டம் ஆற்றில் தண்ணீர் குடித்து ஆற்றை கடக்க முயன்றபோது ஒறு யானை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. யானை போராடி நீண்ட தூரத்திற்கு சென்ற பிறகு அக்கரைக்குச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.