சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர். அதிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களே தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முன்னிலையில் உள்ளது.
எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த தொடர்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளது என்பதைக் காணலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் தொடர் 5.05 டிஆர்பி புள்ளிகளுடன் 10வது இடத்தைப் பெற்றுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடர் 5.30 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 9வது இடத்தைப் பெற்றுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 தொடர் 6.14 டிஆர்பி புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.
கடந்த வாரம் 9வது இடத்தில் இருந்த சுந்தரி - 2 தொடர் 6.62 டிஆர்பி புள்ளிகளுடன் 7வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 7ஆம் இடத்திலிருந்த பாக்கியலட்சுமி தொடரும் 6.62 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று இந்த வாரமும் 7-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
6.88 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று மல்லித் தொடர் 6வது இடத்தையும், சிறகடிக்க ஆசை தொடர் 7.71 புள்ளிகளைப் பெற்று 5வது இடத்தையும் பிடித்துள்ளன.
புதிதாக தொடங்கப்பட்ட தொடரான மருமகள் தொடர் 7.85 டிஆர்பி புள்ளிகளுடன் 4வது இடத்தையும், வானத்தைப்போல தொடர் 7.89 டிஆர்பி புள்ளிகளுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளன.
தொடர் தொடங்கப்பட்ட சில வாரங்களிலேயே முதல் இடத்தைப் பிடித்து, சென்ற வாரம் வரை தக்கவைத்துக்கொண்டிருந்த சிங்கப்பெண்ணே தொடர் 8.74 டிஆர்பி புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
சென்ற வாரம் இரண்டாம் இடத்தில் இருந்த கயல் தொடர் 8.80 டிஆர்பி புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

சின்ன திரையின் டாப் 5 சீரியல்கள்! முதலிடத்தில் மூன்று முடிச்சு!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வார இறுதியில் நிறைவடையும் சிவசக்தி தொடர்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




