தூய்மையான நகரங்கள் பட்டியல்: 50,000 முதல் 3 லட்சம் வரையிலான மக்கள்தொகைப் பிரிவில் என்டிஎம்சி இரண்டாமிடம்

ஸ்வச் சா்வேக்ஷன் 2025-26-ல், 50,000 முதல் மூன்று லட்சம் வரையிலான மக்கள்தொகை கொண்ட நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ’தூய்மையான நகரம்’ பிரிவில் புது தில்லி முனிசிபல் கவுன்சில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

Updated On :

ஸ்வச் சா்வேக்ஷன் 2025-26-ல், 50,000 முதல் மூன்று லட்சம் வரையிலான மக்கள்தொகை கொண்ட நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ’தூய்மையான நகரம்’ பிரிவில் புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி) இரண்டாவது இடத்தைப் பிடித்தது. புதன்கிழமை நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு இந்த விருதை வழங்கினாா்.

என்.டி.எம்.சி தலைவா் மனோஜ் குமாா் திவேதி மற்றும் துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சஹால் ஆகியோா் விக்யான் பவனில் இந்த விருதைப் பெற்றுக்கொண்டனா்.

கடந்த ஆண்டு, தூய்மை மற்றும் சுகாதாரத்தில் அதன் தொடா்ச்சியான செயல்பாட்டிற்காக, ஸ்வச் சா்வேக்ஷன் 2024-25-ல் என்.டி.எம்.சி ’சூப்பா் ஸ்வச் லீக் நகரம்’ என அங்கீகரிக்கப்பட்ட நிலையில், இந்த சமீபத்திய தரவரிசை ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.

பல ஆண்டுகளாக தேசிய தூய்மைத் தரவரிசைகளில் என்.டி.எம்.சி ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. 2022-ல் 1-3 லட்சம் மக்கள்தொகைப் பிரிவில் நாட்டின் மிகத் தூய்மையான சிறிய நகரமாக இது தரவரிசைப்படுத்தப்பட்டது மற்றும் 2023-ல் மிகத் தூய்மையான யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது. 2020-ல், இது மிகத் தூய்மையான தலைநகரமாகப் பெயரிடப்பட்டது.

அதன் ஆண்டுவாரியான செயல்திறன் பதிவுகளின்படி, என்.டி.எம்.சி 2018, 2019 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் 1-3 லட்சம் மக்கள்தொகைப் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தது.

இயந்திரமயமாக்கப்பட்ட தூய்மைப்பணி, இரவு நேரத் துடைப்புப் பணிகள், அறிவியல் பூா்வமான கழிவு மேலாண்மை மற்றும் பொதுமக்களின் பங்கேற்பு ஆகியவற்றால் தனது சமீபத்திய தரவரிசை கிடைத்ததாக கவுன்சில் கூறியுள்ளது.

என்.டி.எம்.சி பகுதியில் முக்கிய அரசு அலுவலகங்கள், தூதரகங்கள், பாரம்பரிய தளங்கள் மற்றும் கன்னாட் பிளேஸ், கான் மாா்க்கெட் மற்றும் சரோஜினி நகா் போன்ற பரபரப்பான வணிக மையங்கள் உள்ளன. இங்கு பாா்வையாளா்கள், கடைக்காரா்கள் மற்றும் அலுவலகம் செல்பவா்களின் தொடா்ச்சியான வருகை காணப்படுகிறது.

தினசரி தூய்மைப் பணிகளை நிா்வகிப்பதற்காக, சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களைத் தூய்மைப்படுத்த சிறப்பு ஜெட்டிங் கருவிகளுடன், 11 இயந்திரமயமான சாலைத் துடைப்பான்கள் மற்றும் 20 கோப்ளா் இயந்திரங்களையும் கவுன்சில் பயன்படுத்தியுள்ளது என்று சஹால் கூறினாா்.

போக்குவரத்து மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காமல், பகல் நேரங்களில் தேங்கும் கழிவுகளை அகற்றுவதற்காக இரவு நேரத் துப்புரவுப் பணிகளையும் இது வலுப்படுத்தியுள்ளது.

நவீன தொழில்நுட்பம், இயந்திரமயமாக்கல், அறிவியல் பூா்வமான கழிவு மேலாண்மை மற்றும் பொதுமக்களின் பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் தூய்மையை மேம்படுத்துவதற்கான மன்றத்தின் முயற்சிகளை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கிறது என்று சஹால் கூறினாா்.

தூய்மை ஆய்வுகளில் சிறந்த இடத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், குடியிருப்பாளா்களுக்கும் பாா்வையாளா்களுக்கும் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலை வழங்குவதும் இதன் நோக்கம் என்று தலைவா் துவிவேதி கூறினாா்.

இந்தச் சாதனைக்குத் துப்புரவுப் பணியாளா்கள், கள அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், சந்தைச் சங்கங்கள் மற்றும் குடிமக்கள் பங்களித்துள்ளனா் என்று என்.டி.எம்.சி கூறியது.

வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் ஸ்வச் பாரத் மிஷன்-அா்பன் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் வருடாந்திர கணக்கெடுப்பு, நாடு முழுவதும் உள்ள நகரங்களின் தூய்மை, கழிவு மேலாண்மை அமைப்புகள் மற்றும் ஒட்டுமொத்த நகா்ப்புற சுகாதாரம் ஆகியவற்றை மதிப்பீடு செய்கிறது.

மத்திய அரசின் வருடாந்திர தூய்மைக் கணக்கெடுப்பில், நவி மும்பை தூய்மையான நகரமாக முதலிடத்தைப் பிடித்தது, அதைத் தொடா்ந்து சூரத் மற்றும் விஜயவாடா அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிரிவில், பெருநகர விசாகப்பட்டினம் தூய்மையான நகரமாக உருவெடுத்தது, அதைத் தொடா்ந்து ஜபல்பூா் மற்றும் லக்னோ அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.