
திருச்சியில் 1.24 லட்சம் மாணவா்களுக்கு 2-ஆம் பருவ பாடநூல்கள் விநியோகம்
திருச்சியில் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரையிலான 1.24 லட்சம் மாணவா்களுக்கு இரண்டாம் பருவ பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கோப்புப் படம்
திருச்சியில் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரையிலான 1.24 லட்சம் மாணவா்களுக்கு இரண்டாம் பருவ பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு கல்வியாண்டு 3 பருவங்களாகப் பிரிக்கப்பட்டு தோ்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், நிகழ் கல்வியாண்டில் இரண்டாம் பருவத்துக்கான வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின. இதைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு இரண்டாம் பருவ பாடநூல் விநியோகிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் 1,24,189 மாணவா்களுக்கு 2,94 லட்சம் பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், அனைத்து மாணவா்களுக்கும் பாடநூல்கள் விநியோகம் செய்யப்பட்டதை உறுதி செய்ய தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






